You are here : mosques

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
ஸுரதுல் கஹ்ஃப் உணர்த்தும் உண்மைகள்

March 08 .2018


பன்­நூ­லா­சி­ரியர் கலா­பூ­ஷணம் M.A.ஹபீபுர் ரஹ்மான் "ஸுரதுல்  கஹப் உணர்த்தும் உண்­மைகள் என்ற நன்­நூலை திருக்­குர்­ஆனின் 18ஆம் அத்­தி­யாத்தில் உள்ள 110 ஆயத்­துக் ­க­ளுக்கும் தெளி­வான விளக்­க­வு­ரையை இப்னு கஸீர் என்ற மாபெரும் நூலி­லி­ருந்து தெரிவு செய்து தந்­தி­ருப்­பது நம் கவ­னத்­திற்­கு­ரி­யது.

இதன்­மூலம் அவர் சன்­மார்க்­கத்தில் கொண்ட ஈடு­பாடு புல­னா­கி­றது. வெள்ளி தோறும் முஸ்­லிம்­களின் ஒவ்­வொரு வாயும் இந்த ஸுரா கஹ்பை ஓதாமல் ஓய்­வ­தில்லை என்­பது வெளிப்­படை. ஆனால் அது வெளிப்­ப­டுத்தும் உண்­மை­களை ஓய்­வாக இருந்து ஆய்வு செய்வோர் மிக மிகக் குறைவே.

கஹ்பு ஸுரா உணர்த்தும் உண்­மை­களை மேற்­படி ஆசி­ரியர், மக்கள் பத்­தி­ரி­கை­யான விடி­வெள்ளி மூலம் வாரம் தோறும் வெளி­யிட்டு வந்­ததை வாச­கர்கள் விரும்பி வாசித்து பயன்­பெற்­ற­தையும் குறிப்­பிட வேண்டும். அது தற்­போது நூலுருப் பெற்று சிறந்த பொக்­கி­ஷ­மாக வெளி வந்­தி­ருப்­பது சிறப்­புக்­கு­ரி­யதே.

இந்த ஸுரா ஒரே நேரத்தில் இறங்­கி­ய­தாக நபி­களார் கூறி­ய­தாக அனஸ் (றழி)அறி­வித்­துள்­ளார்கள்.   ஸுரா கஹ்பை ஓதி வந்தால் அடுத்த ஜும்ஆ வரை சஞ்­ச­லங்­களும் சச்­ச­ர­வு­களும் ஏற்­ப­டா­தி­ருக்கும் என்று நபி­களார் கூறி­யுள்­ளார்கள். இந்த அத்­தி­யாயம் அரு­ளப்­பட்ட பின்­னணி பற்றி சுவை­யாக முபஸ்­ஸி­ரீன்கள் கூறி­யுள்­ளனர்.  

மா நபி­ய­வர்­களின் பிரச்­சா­ரத்தால் ஆத்­திரம் கொண்ட குறை­ஷிகள் நள்ர் இப்னு ஹாரிஸ் தலை­மையில் மதீனா சென்று அங்கு உள்ள யூத அறி­ஞர்­க­ளிடம் முறை­யிட அந்த யூதப் பண்­டி­தர்கள் "முஹம்­ம­திடம் கீழ்­வரும் மூன்று கேள்­வி­க­ளையும் கேளுங்கள். சரி­யான பதில் கிடைத்தால் அன்னார் உண்­மை­யான நபிதான். அவ ரைப் பின்­பற்­றுங்கள். இன்றேல் அன்னார் கதை­கட்­டு­பவர்" என்று கூறி அனுப்­பினார்.

அந்தக் கேள்­வி­க­ளாவன:-

1. பண்டைக் காலத்தில் தம் மக்­களை விட்டும் பிரிந்த மூன்று வாலி­பர்­களைப் பற்­றிய அதி­சய வர­லாறு

2. உலகின் கிழக்கு, மேற்குத் திசை­களை எட்­டிய பிர­யா­ணியின் செய்தி என்ன?

3. ஆன்மா (ரூஹ்) என்றால் என்ன?

இத்­தகு அதி­ச­ய­மான கேள்­வி­க­ளுக்­கு­ரிய விடையை அல்­லர்­ஹவின் மூலம் நபி­களார் பெற்று குறை­ஷி­க­ளுக்குக் கூறி அவர்­களின் வாயை அடைத்­தார்கள்.

300ஆண்­டுகள் குகையில் ஆழ்ந்த உறக்­கத்தில் இருந்து எழும்­பிய அந்த மூவரின் விஷ­யங்­க­ளான வர­லாறும் துல்­கர்னைன் என்ற மாபெரும் இராச்­சி­யத்தின் ஆட்­சி­யாளர் அவரின் விரி­வான பயணம் சுவை மிக்­கது. அத்­துடன் மூஸா (அலை) அவர்கள் கிள்ர் (அலை) உடன் செய்த கடற்­பி­ர­யாணம் மூஸா நபியின் விசித்­தி­ர­மான கேள்­வி­களும் கிள்ர் (அலை) அவர்­களின் விநோ­த­மான விவே­க­மான பதிலும் ஆகிய விளக்­க­மான செய்­தி­களை இந்த நூல் சுவை­படக் கூறு­கி­றது. இவற்றைத் தெரிந்து கொள்ள ஸுரா கஹ்ப் உணர்த்தும் உண்­மைகள் என்ற நூலைப் புரட்­டுங்கள்.

அத்­துடன் இந்நூல் அல்­லாஹ்வின் வல்­ல­மையை விளக்கி மனி­த­னுக்குப் பற்­பல படிப்­பி­னை­க­ளை­யூட்டி மக்­களை நேரிய வழியில் செலுத்தத் தூண்­டு­கி­றது