You are here : mosques

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ரமழான் கற்றுத்தந்த பாடம்

June,17,2018


ரமழான் மாதம் வந்­த­டைந்­ததும் நாம் ஒவ்­வொ­ரு­வரும் மஸ்­ஜிதை நோக்கி நேரம் தவ­றாது ஐவேளை தொழு­கை­க­ளையும் நிறை­வேற்­று­வ­தற்­காக செல்­கின்றோம். ஐவேளை தொழு­கை­க­ளுடன் முன், பின் ஸுன்­னத்­தான தொழு­கை­யி­னையும் தொழுது கொள்­கின்றோம். முனா­பி­க்குக­ளுக்கு கஷ்­ட­மான சுபஹ் தொழு­கை­யி­னைக்­கூட உரி­ய­நே­ரத்தில் நிறை­வேற்­று­கின்றோம். 
எந்­த­ளவு எனில் வழ­மை­யாக தொழு­கைக்­காக மஸ்­ஜிதை நாடி வரு­கின்ற தொழு­கை­யா­ளி­க­ளுக்கும் கூட இட­மில்­லா­த­வாறு மஸ்­ஜிதின் கடைசி வரிசை வரை நின்று தொழுது கொண்­டி­ருக்­கின்றோம். ரமழான் மாதம் மழு­வதும் அல்–­குர்­ஆனை ஒதி வரு­கின்றோம். புறம், பொய், கோள் போன்ற ஹரா­மான பேச்­சுக்­களை பேசு­வ­தி­லி­ருந்தும் எமது நாவினைப் பாது­காத்து கொள்­கின்றோம். ஹரா­மா­ன­வற்­றினைப் பார்ப்­ப­தனை விட்டும் எமது விழி­களை பாது­காத்து கொள்­கின்றோம். முஸ்­லிம்கள் அனை­வரும் சகோ­த­ரர்கள் என்ற எண்­ணத்­துடன் அழகான­மு­றை­யினில் அனை­வ­ரு­டனும் நடந்து கொள்­கின்றோம். 
எமது உற­வி­னர்­களைச் சேர்ந்து நடக்­கின்றோம். தன்­னி­டத்தில் உத­வி­கேட்டு  வரு­ப­வர்­க­ளுக்கு தம்மால் முடிந்­த­வ­ரை­யி­லான உத­வி­களைச் செய்­கின்றோம். அதிக, அதி­க­மாக தான­தர்­மங்கள் செய்து கொள்­கின்றோம். யாரி­டத்­திலும் மனக்­க­சப்­புகள் ஏதும் இன்றி பழ­கிக்­கொள்­கின்றோம். இவ்­வாறு ரமழான் மாதத்­தினில் அதிக, அதி­க­மாக நன்­மை­க­ளையே செய்­து­கொண்­டி­ருக்கும் நாம் ரமழான் மாதம் முடி­வுற்று ஷவ்வால் பிறை­தென்­பட்­டதும் நமது நன்­மை­யான செயற்­பா­டுகள் அனைத்­துக்கும் ஒரு முற்­றுப்­புள்ளி வைத்­து­விட்டு மீண்டும் தீய பழக்­கங்­க­ளி­லேயே இறங்­கு­கின்றோம். 
ரமழான் மாதம் எமக்கு அளித்த பயிற்­சி­யினை எமது வாழ்நாள் பூரா­கவும் எடுத்து நடந்து ஷைத்­தானின் தீங்­கு­களை விட்டும் பாது­காப்­பு­பெற வேண்டும். 
ரமழான் மாதம் பூர்த்­தி­ய­டைந்து ‘ஷவ்வால் பிறை தென்­பட்­டதும் அல்­லா­ஹுத்­த­ஆலா ரமழான் மாதத்­தினில் செய்த இபாதத் அமல்­க­ளுக்­கான கூலியை வழங்கும் அந்த பெருநாள் தினத்­தினை ஹரா­மான வழி­க­ளி­லெல்லாம் செல­வி­டு­கின்றோம். 
மனிதன் பல­வீ­ன­மா­னவன், அவனை தவ­றுக்கும், மற­திக்கும் மத்­தியில் படைத்­த­தற்­காக ஒவ்­வொரு வரு­டமும் புனி­த­மிகு ரமழான் மாதத்­தினில் மனி­தனை வழி­கெ­டுத்துக் கொண்­டி­ருக்கும் ஷைத்­தானை விலங்­கி­டச்­செய்து மனிதனை தீய செயல்களிலிருந்து தம்மை பாதுகாத்து நல்லமல்கள் செய்து தான் பெற்றுக்கொண்ட பயிற்சியினை தனது வாழ்நாள் பூராகவும் எடுத்து நடந்து தன்னிடத்தில் அந்த மனிதன் ஒரு முஃமினாக வந்து சேர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றான்.
 எனவே இந்த புனிதமிகு ரமழான் மாதம் எமக்கு அளித்த பயிற்சியினை எமது வாழ்நாள் பூராகவும் பின்பற்றி ஷைத்தானின் தீங்குகளில் இருந்து பாதுகாப்புபெற்று இறையச்சமுள்ளவராக மாறுவோமாக!

றிஸான் மஜீத்,
கல்முனைக்குடி.