2018-06-18
முகம்மது நபி கிபி 570 இல் சவூதி அரேபியாவில் மக்கா நகரில் பிறந்தார். இவர் இஸ்லாத்தின் இறுதி இறைத்தூதர் ஆவார்.
துபாய் அருங்காட்சியகத்தில் முகம்மது நபி (ஸல்) அவர்களின் தலைமுடி கற்றை இன்றும் பாதுகாத்து வருகிறார்கள். அவரது சிகையில் கருப்பு வெள்ளை முடிகள் உள்ளன. அவை அப்படியே நிறம் மாறாமல் உள்ளன. அவர் ஆலிவ் எண்ணெய் தடவி வந்த வாசம் அந்தப் பேழையில் வீசுகிறதாம். அதை வெளியே வெயிலில் கொண்டுபோனால் உடனே அதன்மீது சூரியவொளி படாதவாறு மேகங்கள் வந்து சூழ்கிறது என்பது அரேபியர்கள் ஆச்சரியப்படும் விஷயம்.
இதுபோக சென்னை பல்லாவரம் மலை உச்சியில் உள்ள பழமையான மசூதியில் நபி பெருமானின் மேலங்கி ஜிப்பா இன்றும் வேப்பம் இலைகள் போடப்பட்ட சந்தன பேழையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.