You are here : mosques

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இரண்டு மில்லியன் இஸ்லாமியர்கள் வழிபட்ட புனித ஹஜ் யாத்திரை

2018-08-21


உலகில் முதலாவது யாத்திரைக்காய உள்ள ஹஜ் யாத்திரைக்காக 

உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 20 லட்சம் இஸ்லாமிய மக்கள் 

மக்கா நகரில் தமது வழிபாட்டு கடமையை நிறைவேற்றியுள்ளனர்


இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்தாவது மற்றும் இறுதி புனிதக்கடமையா

சொல்லப்பட்டுள்ள ஹஜ் கடமைக்காக உலகலாவிய ரீதியில்

ஆண்டுதோறும் 5 நாட்கள் ஹஜ் புனித யாத்திரை நடைபெறுகிறது.


இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்காக உலகம் முழுவதிலும்

இருந்து மெக்கா நகரில் சுமார் 20 லட்சம் இஸ்லாமியர்கள் இங்கு

குவிந்துள்ளனர். இலங்கையில் இருந்து 3000 பேரும் இந்தியாவில்

இருந்து  ஒரு லட்சத்து 75 ஆயிரம் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை

மேற்கொண்டுள்ளனர். 


ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் மக்காவை

வழிபாட முன்பு மெடினா நகரத்திற்கு வருகை தருகின்றனர், அங்கு

நபி முஹம்மது புதைக்கப்பட்ட இடம் மற்றும் அவர் கட்டியெழுப்பிய

முதல் மசூதியை வழிபடுகின்றனர்.


மக்கா யாத்திரை
5 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையில் மக்கா நகரில் உள்ள

பெரிய மசூதியில் தொழுகை மற்றும் வேண்டுதலை நிறைவேற்றிய

பின்னர், மினா நகருக்கு புறப்பட்டு செல்லும் யாத்ரீகர்கள், அங்கு

சில சம்பிரதாயங்களை நிறைவேற்றிவிட்டு அரபா மலையில்

சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக

செல்வார்கள்.


சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சி


இறைவனின் கட்டளையை ஏற்று இறைத்தூதரான இபுறாஹிம் நபி,

தனது ஒரே மகனான இஸ்மாயீலை பலியிட சித்தமான வரலாற்றை

நினைவுகூரும் அரபாத் மலையை வலம்வந்த பின்னர், முசதல்பியா

என்ற வெட்டவெளியில் கூழாங்கற்களை சேகரித்து, ஜம்ராத் என்ற

இடத்தில் தீயமன ஆசைகளான சாத்தான் மீது கல்லெறியும்

சம்பிரதாயத்தை யாத்ரீகர்கள் நிறைவேற்றுகின்றனர்.


பின்னர், தங்களது விருப்பம்போல் ஆடு மற்றும் ஒட்டகங்களை

‘குர்பானி’ (இறைவனின் பெயரால் புனிதப் பலி) செய்துவிட்டு,

தங்களது பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டவர்களாக - ‘ஹாஜி’

என்ற பட்டத்துடன் ஹஜ் புனித யாத்திரையை நிறைவு

செய்கின்றனர். 

 


இதன் நிறைவு நாளில் ஈத் அல்-ஆதா என்றழைக்கப்படு பண்டிகை

உலகெங்கும் வாழும் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகின்றது.