You are here : news

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழா

2019-09-01


ஸ்ரீ வரதராஜ ஆலய விநாயகர் சதுர்த்தி நாளை


கெட்­டாஞ்­சேனை,
கொழும்பு கெட்­டாஞ்­சேனை ஸ்ரீ வர­த­ராஜ விநா­யகர் தேவஸ்­தா­னத்தின் சதுர்த்தி நாளை திங்­கட்­கி­ழமை நடை­பெறும்.
விநா­யகப் பெரு­மா­னுக்கு அதி­காலை 4 மணிக்கு பஞ்­ச­விம்­சதி சங்­கா­பி­ஷே­கமும், மாலை 2 மணிக்கு அஷ்­டோத்­திர சத சங்­கா­பி­ஷே­கமும், விசேட பூஜை வழி­பா­டு­களும் இடம்­பெ­ற­வுள்­ளன.
அத­னைத்­தொ­டர்ந்து  மாலை 5 மணிக்கு விநா­யகப் பெருமான் இர­தத்தில் எழுந்­த­ருளி கொட்­டாஞ்­சேனை வீதி, பிக்­கறிங்ஸ் வீதி, ஸ்ரீ குணா­னந்தா மாவத்தை, கொலெஜ் வீதி சந்தி, வாசல வீதி, புளு­மெண்டால் வேன் வீதி, பெனடிக் மாவத்தை, மேபீல் வீதி, வாசல வீதி வழி­யாக வீதி­யுலா வர­வுள்ளார்.
மேலும், குறித்த தின­மன்று  நண்­பகல் 12.30மணிக்கு கோவில் மண்­ட­பத்தில் மகேஸ்வர பூஜை இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

வத்­தளை இந்து மன்ற விநா­யகர் சதுர்த்தி விழா

வத்­தளை,
வத்­தளை இந்து மன்­றத்தின் 3ஆவது வருட விநா­யகர் சதுர்த்தி விழா வத்­தளை ஹேகித்தை வீதியில் அமைந்­துள்ள வத்­தளை இந்துமன்ற வளா­கத்தில் நாளை 2ஆம் திகதி திங்­கட்­கி­ழமை காலை ஆரம்­பித்து 8ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை வரை நடை­பெ­று­கி­றது.
தினமும் கண­பதி ஹோமம், பஜனை, தேவாரம், பக்­தி­பா­டல்கள் இடம்­பெறும். ஞாயிற்­றுக்­கி­ழமை 8ஆம் திகதி பிற்­பகல் 2 மணி­ய­ளவில் ஊர்­வலம் ஆரம்­பித்து முகத்­து­வாரம் காக்கைத் தீவு கடற்­க­ரையில் கரைக்கும் நிகழ்வு இடம்பெறும்.

 

ஆவணி சதுர்த்தி தேர்த்திருவிழா

இரத்தினபுரி,
இரத்தினபுரி டேனாகந்தை அருள்மிகு ஸ்ரீ ஆதி லக்க்ஷ்மி விநாயகர் ஆலய ஆவணி சதுர்த்தி தேர்த்திருவிழா நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் கிராமசாந்தி , வாஸ்த்து சாந்தி , பிரவேசபலி என்பன இடம்பெறும். திங்கட்கிழமை காலை விசேட பூஜைகளைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும். 2.30 மணிக்கு கங்கை கரையில் வேல்பூட்டுதல் , பரவைக்காவடி,தீமிதிப்பு உற்சவத்தைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு வசந்த மண்டப பூஜைகளுடன்    தேர்  பவனி  இடம்பெறவுள்ளது.


57 ஆவது விநா­யக சதுர்த்தி

மின்­னகர், 
மின்­னகர், நோட்­டன்­பிரிட்ஜ் , அருள்­மிகு ஸ்ரீ சித்­தி­வி­நா­யகர் ஆலய 57 ஆவது விநா­யக சதுர்த்தி அலங்­கார உள்­வீதி உலா   நாளை திங்­கட்­கி­ழமை காலை 9.45 மணிக்கு விநா­யகர் வழி பாட்­டுடன் ஆரம்­ப­மாகி, தொடர்ந்து பால்­கு­ட­ப­வனி, விஷேட பூஜைகள் , சங்­கா­பி­ஷேகம் , அலங்­கார தீபா­ரா­தனை, மகேஸ்­வர பூஜை­யுடன் அன்­ன­தானம் இடம்­பெற்று, மாலை சிறப்பு வசந்த மண்­டப பூஜையைத் தொடர்ந்து சுவாமி உள்­வீதி உலா இடம்­பெறும்.