You are here : news

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அநுராதபுரம் சிறைச்சாலையில் புதிய பிள்ளையார் கோவில் அமைக்கப்பட்டு திறப்பு விழா!

2019-09-21


அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளுக்கு பிரத்தியேகமாக அமைந்துள்ள இடத்தில் புதிய பிள்ளையார் கோவில் அமைக்கப்பட்டு திறப்பு விழா சிறைச்சாலை அத்தியட்சகர் ரோஹன கலப்பதி தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிவன் அறக்கட்டளை இயக்குனரும் மக்கள் முன்னேற்ற கூட்டணியின் பொதுச் செயலாளர் நாயகமுமான கணேஸ்வரன் வேலாயுதம் மற்றும் பிரதான
சிறைக்காவலர் சமன்த தசாநாயக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 


பருத்தித்துறை ஆலடிப் பிள்ளையார் கோவில் சசிகுமார் குருக்கள் மற்றும் யாக்கருப் பிள்ளையார் குரு உதய சங்கர் ஆகியோர் விசேட சமய வழிபாடுகளை நடத்தி வைத்தனர். 

இறுதியில் அன்னதானமும் வழங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் சிறைச்சாலையின் சமூக நலன்புரி அமைப்பின் அதிகாரி அரசங்க எல்பிட்டிய மற்றும் அதிகாரிகளுடன் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் சதீஸ் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் நாகலிங்கம் தர்சன்,பருத்தித்துறை மின்சாரத் துறை அத்தியட்சர் பொறியியலாளர் கமழகோபன் சாவகச்சேரி பொது சுகாதாரப் பரிசோதகர் கமல் குமார் 
தமிழ் அரசியல் கைதிகளுடன் ஏனைய தமிழ் சிங்கள சிறைக் கைதிகள் கலந்து கொண்டனர்.