March 28.2018
பழநி பங்குனி உத்திரத்திருவிழாவை முன்னிட்டு தங்கமயில் வாகனத்தில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பழநி முருகன்கோயிலில் பங்குனி உத்திரவிழா மார்ச் 24ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றுவருகிறது.
கொடுமுடி தீர்த்தக்காவடிக்கு பெயர் பெற்ற, பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆறாம்நாள், (மார்ச் 29) இரவு திருக்கல்யாணம், வெள்ளித்தேரோட்டம், ஏழாம்நாள் (மார்ச் 30) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாலையில் கிரிவீதியில் திருத்தேரோட்டம் நடைபெறும். ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா செய்து வருகின்றனர்.