You are here : viharas

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
புத்தர் ஞானம் பெற்ற மகாபோதி கோயிலின் வரலாறு!

January 29 , 2018


பீகார் மாநிலத்தின் கயா மாவட்டத்தில், மாநிலத் தலைநகரமான பாட்னாவிலிருந்து 96 கிமீ (60 மைல்) தொலைவில் அமைந்துள்ளது மகாபோதி புத்த கயா கோயில். பௌத்த நூல்களின் படி புத்த காயாவிலுள்ள போதி மரமே புத்தர் ஞானம் பெற்ற இடமாகும். புத்த ஜாதகக் கதைகளின்படி, புவியின் தொப்புள் இது.

பாலி நூல்கள் இவ்விடத்தை போதி மண்டா என்றும், அங்குள்ள விகாரையை போதிமண்டா விகாரை என்றும் குறிப்பிடுகின்றன. போதி மரத்தைச் சுற்றி ஒரு குறிப்பிட்ட தூரத்துக்குப் புல், பூண்டுகள் கூட முளைப்பதில்லை.

கல்ப முடிவில் பூமி அழியும்போது போதிமண்டாவே இறுதியாக அழியும் அதேபோல் மீண்டும் உலகம் உருவாகும்போதும் இவ்விடமே முதலில் தோன்றும் என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன.

4புத்தர் ஞானத்தை அடையும் பல்வேறு முயற்சிகளில் தோல்வியுற்ற புத்தகயா சென்ற புத்தர், ஒரு மரத்தடியில் உண்மையின் பொருளை அறிவதற்காக தியானத்தில் அமர்ந்தார். அன்ன ஆகாரத்தை துறந்தார். எலும்பும் தோலுமாக ஆனால் தேஜஸுடன் இருந்த அவரை கண்ட ஒரு பெண்மணி தேனும் பால் சோறுடன் கூடிய இன்னமுது படைத்தார்.

ஊட்டமிக்க உணவினால் புத்துணர்ச்சி பெற்ற அவர் நிஷ்டையைத் தொடங்கினார். அவரை விட்டு அறியாமை எனும் இருள் விலகியது.சத்திய சன்மார்க்க நெறியினை உணர்ந்தார். விழிப்புணர்ச்சி பெற்றார். கழிவிரக்கம் கொண்டார்.

49 நாள் கழித்து வைகாசி மாதத்தில் நிறைந்த பவுர்ணமி அன்று கி.மு.528 ஆம் ஆண்டு ஞானப் பேரொளி பெற்றார். இந்த நாள்தான் புத்த பூர்ணிமாவாகக் கொண்டாடப்படுகிறது.

7மகாபோதி கோயிலின் கோபுரம் தூரத்திலிருந்தே தெரிகிறது. செங்கல்லால் ஆனது. இந்தியாவில் இது போன்ற கட்டிடங்களில் தொன்மையான கட்டிடமாக இதுவே கருதப்படுகிறது. 180 அடி உயரமும் 60அடி அகலமும் கொண்ட பிரமிட் வடிவிலான இந்தசெங்கற் கோயில் கண்களுக்கு ஒரு விருந்து.

மத்திய கோபுரம் மலர் வடிவமைப்புகளையுடைய பல சிறிய கோபுரங்களால் சூழப்பட்டுள்ளது. கோயிலினுள் நுழைந்தவுடன் நம் கவனத்தைத் திருப்புவது இங்கு இருக்கும் அசாதாரண அமைதிதான்.

கருவறையின் உள்ளே இருப்பது கருங்கல்லால் வேயப்பட்டு தங்கப்பூச்சுடன் மிளிரும் புத்தரின் சிலை. பூமிஸ்பர்ச நிலையில் அமர்ந்து அருள் பாலிக்கிறார். இதுதான் அவர் ஞானம் பெற்ற இடம்

யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக பாரம்பரிய தளமான இது, கோயில் சுவர்களில் ஜாதகக் கதைகளும் புத்தரின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. சிவப்பு அங்கியுடன் புத்த பிட்சுக்களும், கீழை நாடுகளிலிருந்து பக்தர்களும் கோயிலின் மேற்கு வாயிலிற்கும் போதி மரத்திற்கும் இடையே காகித பூக்களுடனும் விளக்குகளுடனும் பிரார்த்தனை செய்கிறார்கள்.

அடுத்தது புகழ் பெற்ற போதி மரம்.வெளி பிரகாரத்தில் சுற்றாலையில் உள்ளது. ஜாதகக் கதைகளில் பல இடங்களில் இது இடம் பெறுகிறது. இங்கேதான் புத்தர் முதல் வாரத்தை செலவழித்தார். இந்த மரம் பல தடவை வெட்டப்பட்டது.

முதலில் இதனுடைய கன்றைத்தான் அசோகர் தன்னுடைய பிள்ளைகள் மூலமாக இலங்கைக்கு அனுப்பினார். பிற்காலத்தில் சசாங்கன் என்ற வங்க அரசன் இதை வேருடன் அழித்தபோது இலங்கையிலிருந்து அப்போது நடப்பட்ட மரத்தின் கன்றுதான் கொண்டு வரப்பட்டு நடப்பட்டது. இது ஒவ்வொரு முறையும் தழைத்து வளர்ந்தது . இப்போது இருப்பது ஐந்தாவது தலைமுறை மரம். மணி ஓசை காற்றில் எதிரொலிக்கிறது. மரத்தைச் சுற்றி அசோகர் எழுப்பிய சிகப்பு மணற்பாறையிலான பெரிய மேடை .

இப்போது இருப்பது ஐந்தாவது தலைமுறை மரம். மணி ஓசை காற்றில் எதிரொலிக்கிறது. மரத்தைச் சுற்றி அசோகர் எழுப்பிய சிகப்பு மணற்பாறையிலான பெரிய மேடை .

வஜ்ராசனம் (அ) வைர சிம்மாசனம் (அ) ஞான பீடம் என்று போற்றப்படும் இந்த மேடையைச் சுற்றியுள்ள உலோக விளக்குகளால் மேடையே தகதகவென்று மினுமினுக்கிறது.

அதற்கு முன்னால் மகானின் பெரிய அடிச்சுவடுகள் கருங்கல்லால் செதுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு காலிலிருக்கும் சக்கரமும் தம்ம சக்ர ப்ரவர்தனத்தை குறிக்கிறது. (தர்ம சக்கரத்தை சுற்ற வைப்பது).இப்படி ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. கடைசியாக வருவது ராஜ்யதானா மரம்.

சாக்யமுனி ஏழாவது வாரத்தை இதன் கீழ்தான் செலவழித்தார் என்கின்றன குறிப்புகள்.அந்தச் சமயத்தில் பர்மாவிலிருந்து வந்த இரு வணிகர்கள் அவரை தஞ்சமடைந்தனர். அதிலிருந்துதான் புத்தம் சரணம் கச்சாமி என்று பதம் உருவாகியது. இதன் அர்த்தம் ‘நான் புத்தருக்கு எனை சமர்ப்பிக்கின்றேன்’