You are here : viharas

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஏப்ரல் 28இல் தேசிய வெசாக் தினம்

March 07.2018


தேசிய வெசாக் தின வைபவம் இம்முறை ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி பிங்கிரிய ரஜமஹா விஹாரையில் இடம்பெறும் என்று புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. 

அரச வெசாக் உற்சவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஏப்ரல் மாதம் 28ம் திகதி இடம்பெறும்.

இம்முறை வெசாக் நோன்மதி தினம் ஏப்ரல் மாதம் 29ம் திகதி கொண்டாடப்படுகிறது.

 ஆள் மனதின் தூய்மை நிலைபேறான மன அமைதிக்கு வித்திடும் என்பது இம்முறை வெசாக் பண்டிகைக்கான பிரதான தொனிப்பொருளாகும்.

வெசாக் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடளாவிய ரீதியில் பல பௌத்த மத நிகழ்வுகளும் தான சாலைகளும் ஒழுங்கு செய்யப்படுமென்று புத்தசாசன அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதம் 26ம் திகதி வெசாக் வாரம் ஆரம்பமாகும்.

குருநாகல் மாவட்டத்தில் உள்ள அனைத்து விஹாரைகளையும் புனரமைத்து அபிவிருத்தி செய்யும் விசேட வேலைத்திட்டமொன்றும் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.