You are here : worship

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

2018-09-12


இந்து மக்கள் கடைபிடிக்கும் விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி கடைபிடிக்கப்படுகின்றது.  அன்றைய தினம் இந்துக்கள் பயபக்தியோடு விநாயகரை வழிபட்டு , உண்ணா  நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படும்.


விரத முடிவில் வழிபாடு செய்த விநாயகர் சிலைகளை நீர் நிலையில் கரைப்பதன் மூலம் தமது துன்பங்கள் அதனுடன் கரையும் என்பது நம்பிக்கை. இதற்காக இந்தியாவில் பிரம்மாண்டமான அளவில் விநாயகர் விக்கிரகங்கள் தயாரிக்கப்படுகின்றன.

விநாயகர் சதுர்த்தி வழிபாடு : 


விநாயகர் சதுர்த்தி அன்று விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கி வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி , இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைத்து , பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மனையை வைக்க வேண்டும்.


அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும் , இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.


பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை இறைவனுக்கு பூஜிக்க முடியுமோ அதனை கொண்டு பூஜை செய்யாலம். எனினும் இன்றைய நாளில் எருக்கம்பூ மாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பு தரும்.


அதேபோன்று விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து நைவேத்யமாக படைத்து மகிழலாம். அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம். உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.
அதனை போன்று நாமும்  மாயை நீங்கி நல்ல குணங்களை வெளிபடுத்த அருளும்படி இறைவனை வேண்டி பிராத்ததை செய்தல் வேண்டும்.


பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம். பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.

இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.

இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை ஏதாவது நீர்நிலையில் கொண்டுபோய் போடுவது வழக்கம். பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்.
‘பிடியதன் உரு உமைகொள மிகு கரியது, வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர், கடிகணபதி வர அருளினன் மிகுகொடை, வடிவினர், பயில்வலி வலமுறை இறையே’ அழகிய தமது திருவடிகளை வணங்கும் அடியார்களின் துன்பத்தைப் போக்குவதற்காக வலிவலம் என்ற திருக்கோயிலில் இருக்கின்ற இறைவன் தான் ஆண்யானையாகவும் இறைவியைப் பெண்யானையாகவும் கொண்டு கணபதியாகிய விநாயகர் வர அருள்புரிந்தார் .என திருஞானசம்பந்தர் அருளிஉள்ளார்.