You are here : worship

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நினைத்த இடத்தில் வழிபட நன்மைகள் நல்கும் ஷணிக லிங்கம்

2018-12-06


 
சிவ லிங்கத்திற்கு பூஜை செய்வதில் விதிமுறைகள் உள்ளது. சைவ தீட்சை பெற்றிருத்தல் சிவலிங்க பூஜைக்கான குறைந்தபட்ச தகுதியாகும். அனைவராலும் சிவலிங்க வழிபாட்டினை மேற்கொள்ள முடியாது. இருப்பினும் இப்படியானவர்களின் சிவனுக்கான விரதம் மற்றும் பூஜைகளை செய்யும் போது சிவலிங்கத்தினை செய்து பூஜைசெய்யலாம். இவ்வாறு ஒருதடவை பூஜிக்கும் நோக்கில் அமைக்கப்படும் லிங்கங்கள் 'ஷணிக லிங்கம்’ எனப்படும். 


ஷணிக லிங்கத்தை முன்னைய காலங்களில் முனிவர்கள் மற்றும் அரசர்கள் தாம் செல்லும் வழியில் சிவபூசை செய்ய நேரிடும் போது உருவாக்கி வழிபட்டனர் என்பதனை புராணங்களின் மூலம் அறிய முடிகின்றது. தற்போதைய காலங்களில் கெளரி விரத பூஜையின் போது ஷணிக லிங்க வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. வழிபாடு முடிந்தபின் இவ் லிங்கங்கள் ஓடும் நீரில் கரைத்துவிடப்படும். 


ஷணிக லிங்கங்கள் உருவாக்கப்படும் பொருளினை கொண்டு 16 வகைப்படும். இவை ஒவ்வொன்றினதும் பலன்களும் வேறுபடும். நாமும் இவ்வகையில் லிங்கம் அமைத்து மெய்யன்போடு வழிபடுவோமானால் அனைத்து பேறுகளும் கிடைக்கப்பெறலாம். 
புற்று மண் லிங்கம் - மோட்சம் தரும்
 ஆற்று மண் லிங்கம் - பூமி லாபம் தரும்
பச்சரிசி லிங்கம் - பொன், பொருள் தரும்
அன்ன லிங்கம் -அன்ன விருத்தி தரும்

பசுவின் சாண லிங்கம் - நோய்கள் தீரும்
வெண்ணெய் லிங்கம் - மன மகிழ்ச்சி தரும்
ருத்ராட்ச லிங்கம் - அகண்ட அறிவைத்தரும்
விபூதி லிங்கம் - அனைத்துசெல்வமும் தரும்

சந்தன லிங்கம் - அனைத்துஇன்பமும் தரும்
மலர் லிங்கம் - ஆயுளை அதிகமாக்கும்
தர்ப்பைப்புல் லிங்கம் - பிறவியிலாநிலை தரும்
சர்க்கரை லிங்கம் - விரும்பிய இன்பம் தரும்

மாவு லிங்கம் - உடல் வன்மை தரும்
பழ லிங்கம் - சுகத்தைத் தரும்
தயிர் லிங்கம் - நல்ல குணத்தைத் தரும்
தண்ணீர் லிங்கம் - எல்லா மேன்மைகளும் தரும்