You are here : worship

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




"நீருக்கு நன்றி" மகா ஆரத்தி விழா

2019-01-09


பிரபல ஆன்மீக வழிகாட்டியும் வாழ்க்கை நல மேம்படுத்துனருமான குருஜி மித்ரேஷிவா அவர்களின் வழிகாட்டுதலின் படி செயல்படும் தக்ஷிணா பவுண்டேஷன் என்னும் அமைப்பு பவானி கூடுதுறையில் ஏற்பாடு செய்திருந்த நீருக்கு நன்றி எனும் ஆரத்தி விழாவில் ஆயிரக்கணக்கானோர் இணைந்துகொண்டனர். 

நீரும் ஓர் உயிரே 
உயிர்வாழவும் அன்றாட தேவைகளுக்காகவும் நீரை பயன்படுத்துகிறோம். நாம் வாழும் இந்த உலகமும் நமது உடலும் 75 சதவீதத்திற்கும் அதிகமான நீரினால் ஆனது. நீர் இல்லாமல் இந்த உலகமே இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. 
 நாம் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை நீர் பிரதிபலிக்கிறது என்பதை அறிவியல் ஆய்வில் ஜப்பானைச் சேர்ந்த ஆய்வாளர் மசரோ எமட்டோ நிரூபித்துள்ளார். இவர் நீரின் மூலக்கூறுகளைப் பிரித்து ஆராய்கையில் வெளிப்பட்ட உண்மை என்னவென்றால், நாம் அன்பு செலுத்தும் போது நீர் ஒரு வைரத்தைப் போல ஜொலிக்கிறது. நாம் வெறுப்புணர்ச்சியை வெளிப்படுத்துகையில் நீர் சிதைந்து உரு அழிந்து போவதையும் ஆய்வுச் சாலையில் அவர் நிரூபித்து காட்டியுள்ளார். 


நீரின் தொடர்ச்சியான நிலவுகை உலக ஜீவராசிகள் அனைத்துக்கும் முக்கியமான தேவையாகும். உணர்வுகளில் தலையாயது நன்றி என்னும் உணர்வு. தன்னியல்பாக சொல்லச்சொல்ல வெளிப்படுத்த வெளிப்படுத்த மேலும் மேலுமென பெருகிச்செல்லும் பலன்களை அளிக்கக் கூடியது இந்த நன்றி என்னும் உணர்வு. காலம் காலமாக நம்மை வாழவைக்கும் நீருக்கு நன்றி சொல்லும் வழக்கமாக வற்றாத ஜீவ நதிகளான கங்கை போன்ற நதிகளுக்கு அன்றாடம் மகா ஆரத்தி காட்டப்படுகிறது. 


இதனை போன்று நீருக்கு நன்றி சொல்லும் மகா ஆரத்தி விழா பவானி கூடுதுறையில் ஞாயிறு (ஜனவரி 6) அன்று நடைபெற்றது.

நீருக்கு நன்றி ஆரத்தி விழா 
ஞாயிற்றுக்கிழமை மாலை செண்டை வாத்திய முழக்கத்துடன் 101 கலச ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நீர் குறித்த சிறப்பு நடனம், சிங்காரி மேளம் உள்ளிட்ட சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினர்களுடைய உரைகளைத் தொடர்ந்து, குருஜி மித்ரேஷிவா சிறப்புரை ஆற்றினார் " மண்ணில் உயிர்கள் வாழ கருணை செய்யும் மகத்தான நீருக்கு நம் உள்ளத்தின் அடியாழத்திலிருந்து உணர்ச்சி மிக்க நன்றி சொல்லும் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்விற்கு வருகை தந்துள்ள அனைவரும் போற்றுதலுக்குரியவர்கள். நன்றியுணர்வு உணர்வுகளில் தலையானது. பல்வளங்களாய் பல்கிப் பெருகக்கூடியது. வாழ்வு வளம் பெற நீருக்கு நன்றி சொல்வோம். நதிகளை நீர் நிலைகளை நீரைப் போற்றுவோம்" என்றார். 
அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மகா ஆரத்தி விழா நடைபெற்றது. கங்கையில் எப்படி ஆரத்தி விழா நடைபெறுமோ அதே போலவே இந்த ஆரத்தி விழா நடைபெற்றது. பரம்பரை பரம்பரையாக கங்கைக்கரையில் ஆரத்தி விழா செய்யும் அர்ச்சகர்களே இதற்காக வரவழைக்கப்பட்டு இருந்தார்கள். பவானி, ஈரோடு, கோவை, கோபிச்செட்டிப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பல்லாயிரக் கணக்கில் நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். 


நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன், நீதிபதி. ஜி.ஆர். சுவாமிநாதன், கே.ஜி.பக்தவத்சலம், கே.ஜி. மருத்துவமனை, கே. ராமசாமி, ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ், புருஷோத்தமன், தீபா மெடிக்கல்ஸ், சூர்ய கைலாஷ், கைலாஷ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.