You are here : worship

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




குழந்தை வரம் அருளும் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் - 1,691 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை

2019-04-09


இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோவிலில் புகழ்பெற்ற குழந்தைகள் தூக்க நேர்ச்சை வழிபாட்டு நேற்று ஆரம்பமாகி இன்றுடன் நிறைவு பெற்றது. வருடாந்தம் நடைபெறும் இவ் விழாவில் இவ் வருடம் 1,691 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெறுகிறது. 
மார்ச்  மாதம் 30ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து நாட்கள் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற்று பங்குனி மாதம் பரணி நட்சத்திர தினத்தில் தூக்க நேர்ச்சை நடைபெறுகிறது. 


விழாவின் முக்கிய நிகழ்வான குழந்தைகளின் தூக்க நேர்ச்சை திருவிழா நேற்று காலை 6 மணிக்கு தொடங்கி இன்றுடன்  நிறைவடைந்தது. தூக்க நேர்ச்சை தொடங்குவதற்கு முன்பதாக குழந்தைகளை தூக்க நேர்ச்சை செய்து வைக்கும் தூக்ககாரர்களுக்கு முள்குத்தி நமஸ் காரம் நடந்தது. அதனை தொடர்ந்து காலை 6 மணிக்கு அம்மனுக்கு தூக்க நேர்ச்சை நிகழ்ந்து  பின்னர் 1,691 குழந்தைகளின் தூக்க நேர்ச்சை நடத்தப்பட்டது. 
குழந்தை இல்லாத தம்பதிகள் இந்தக் கோயிலில் குழந்தை வரம் வேண்டுகிறார்கள். வேண்டுதல் மூலம் கிடைக்கும் குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடையும் முன் இக்கோயிலில் தூக்க நேர்ச்சை நடத்திக் கொடுக்கிறார்கள். தூக்ககாரர்கள் நேர்ச்சை குழந்தைகளை தூக்க தேரில் தூக்கி கோவிலை ஒருமுறை சுற்றி வருவதன் மூலம் நேர்த்தி நிறைவேற்றப்படும். இவ்விழாவில் நேர்ச்சை நிறைவேற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு கவசங்கள் அணியப்பட்டு இருந்தன.


இந்த விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.