You are here : worship

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அனைத்து சடங்குகளுடனும் நிறைவேறிய வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் வைகாசி பொங்கள் விழா

2019-05-21


சிலப்பதிகார காலத்தையொட்டிய வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி பொங்கள் விழா நேற்றை தினம் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. 
தமிழ் மற்றும் சிங்களவர்களவர்களை இணைக்கும் கண்ணகி அம்மன் பொங்கள் விழாவில் நேற்றைய தினம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு படையினரின் உதவியுடன் நடைபெற்ற இவ் விழாவில் வழமை பேன்று அனைத்து சடங்குகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது.


பொங்கள் விழாவின் “வளந்து நேருதல்’ என்னும் சடங்கு நடைபெறும். பூசாரியார் வளந்து (பானை) ஏந்தி ஆடுவார். இறுதியில் நிலத்தில் பள்ளமாக வெட்டி அமைக்கப்பட்ட அடுப்பில் வளத்தினை வைப்பார்.  பின் பொங்கலிடும் அரிசியை ஏந்தி ஆடி பொங்கள் பானையில் இடுவார். 


ஏந்தியாடும் அரிசியையும் அள்ளி மேலே எறியும் பேது இவ்வரிசிகள் நிலத்தில் விழுவதில்லை. அத்தோடு வளந்துப் பானையில் சூத்திரதாரணம் செய்யப்பட்டு, பானையின் கழுத்தில் வெற்றிலை கட்டப்பட்டிருக்கும். இவை பெருநெருப்பிலும் எரிந்து சாம்பலாகாது, கட்டியபடியே காணப்படுவது இது கண்ணகி அன்னையின் மகிமையை இன்றளவும் மெய்ப்பிக்கும் அதிசயங்களாகும்.


பொங்களின் தொடர்ச்சியாக அன்னைக்கு பூஜைகளும் பக்தர்களின் வேண்டுதல்களும் நிறைவேற்றப்படுகின்றது. பண்பாடு மாறாதவர்களாக ஆயிரம் கணக்கில் பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்து அன்னையை வழிபட்டு பேரானந்தம் அடைந்தனர்.

படங்கள் Vattappalai kannaki