You are here : worship

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரதிஷ்டை தின சிறப்பு பூஜை நாளை

2019-06-11



சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதலாம் திகதியிலிருந்து 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும் அதே வேளை கோவில் திருவிழா நாட்கள், பிரதிஷ்டை தினம், விஷூ பண்டிகை, ஓணம் பண்டிகை மற்றும் சிறப்பு நாட்களிலும் திறக்கப்படுகின்றது.


ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15ஆம் திகதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அதற்கு முன்பாக முன்னதாக பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க் கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து நாளை (புதன்கிழமை) பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வழிபாடுகளுக்கு பின் கோவில் நடை இரவு 10.30 மணிக்கு அடைக்கப்படும் என தெறிவிக்கப்படுகின்றது. 
ஆனி மாத பூஜைக்காக 15ஆம் திகதி ஆலயம் திறக்கப்படு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து தீபாராதனை நடத்துவார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடை பெறாது.


16-ந் தேதி அதிகாலை முதல் 20-ந் தேதி வரை 5 நாட்களில் வழக்கமான பூஜைகளுடன், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், நெய்யாபிஷேகம் என்பன நடை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.