You are here : worship

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் 2019

2019-06-16


ஈழத்தின் ஆறாவது ஈஸ்வர தலமாக போற்றுவதற்கு பெருமை வாய்ந்ததும்,காஞ்சி காமகோடி பீடகுருவருள் பொருந்தியதுமான கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேச்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவிலில் வேதாகம முறைப்படி பாலஸ்தாபன கும்பாபிஷேகம் கடந்த  14.06.2019 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.


 அடியார்கள் வேண்டிய வரம் அருளும் அன்னை அகிலாண்டேச்வரிக்கு மகாகும்பாபிஷேகம் செய்து பன்னிரண்டு ஆண்டுகள்நிறைவில் நடைபெறும் மேற்படி பாலஸ்தான மகா கும்பாபிஷேகத்தினை  "சாகித்திய சிரோன்மணி, நயினை குருமணி”சிவஸ்ரீ. வை. மு.ப.முத்துக்குமாரசாமி குருக்கள் (ஆதீன பிரதமகுரு, ஸ்ரீ நாகபூஷணி அம்மன்கோவில், நயினாதீவு - வடகோவை) ,மற்றும்  " வேதாகம கிரியா கலாநிதி”சக்தி உபாசகர்சிவஸ்ரீ. சதா சங்கரதாஸ் குருக்கள் (ஆலய பிரதம குருமணிகள்  குறிகட்டுவான் ஸ்ரீ மனோண்மணி அம்மன் ஆலயம்பண்டாரிகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்.) ஆகியோரது தலைமையில் இடம்பெற்றது.


இவ் கும்பாபிஷேகத்தில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.