You are here : worship

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




10 அடி ஆழமான குழிக்குள் இறங்கி மௌன விரதம் இருக்கும் சாமியார்.!!

2019-11-21


இந்தியாவின் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 10 அடி ஆழ குழிக்குள் இரங்கி சாமியார் ஒருவர் மவுன விரதம் மேற்கொண்டுள்ளார். 


ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நல்லிக்கவுண்டன்புதூரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (57). இவர் கடந்த 25 ஆண்டுகளாக துறவறம் மேற்கொண்டு வருகிறார். சில ஆண்டுகளாக அந்த பகுதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று மாணவ- மாணவிகளுக்கு யோகா மற்றும் ஆன்மிக விடயங்கள் குறித்து கற்றுக்கொடுத்து வந்தார். 

 

உலக நன்மைக்காக...
இந்த நிலையில் கடந்த ஜூைல மாதம் 17ஆம் திகதி அமர்நாத் புனித யாத்திரை சென்றார். அப்போது அங்குள்ள ஒரு பகுதியில் தூங்கி கொண்டிருந்தபோது கனவில் தோன்றிய மகான் ஒருவர் உலக நன்மைக்காக நல்லிக்கவுண்டன்புதூரில் 10 அடி ஆழ குழியில் பாதாள லிங்கத்தை பிரதிஷ்டை செய்து 48 நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு மறைந்துவிட்டார்.


இதைத்தொடர்ந்து, அமர்நாத் புனித யாத்திரை நல்லிக்கவுண்டன்புதூர்  வந்த இவர் தன்னுடைய பெயரை நிஜானந்த காசி விஸ்வநாத சாமி எனவும் மாற்றிக்கொண்டார்.


பின்னர் தன்னுடைய சொந்த இடத்தில் 10 அடி ஆழ குழி தோண்டி, அதில் பாதாள சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து கடந்த 17ஆம் திகதி முதல் மௌன விரதம் கடைபிடிக்கதொடங்கியுள்ளார்.
17ஆம் திகதி இரவு குழிக்குள் இறங்கி சிவலிங்கத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்தார். பின்னர் தியானம் இருந்தபடி தனது மௌன  விரதத்தை தொடங்கினார் .உணவு சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் விரதம் இருந்து சிவலிங்கத்துக்கு பூஜை செய்து வருகிறார். 4ஆவது நாளான நேற்றும் அவருடைய சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மவுன விரதம் இருப்பதால் பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர் ஒரு வெள்ளைத்தாளில் பதில் எழுதி கொடுத்து வருகிறார். 


தொடர்ந்து 48 நாட்கள் குழிக்குள் விரதம் இருந்து சிவலிங்கத்துக்கு சிறப்பு வழிபாடு நடத்த உள்ளார். இவருக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் குழியின் மேல்பகுதியில் தகரத்தினாலான மேற்கூரை கொண்ட கொட்டகை அமைக்கப்பட்டு உள்ளது.