You are here : writers

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
தமிழகத்தில் உள்ள கோயில்கள் சிற்பக் கலையின் சங்கமம்

February 11, 2016பொன்­னியின்  செல்வன் ஏற்­ப­டுத்­திய தாக்­கத்தால்  பல வர­லாற்று இலக்­கி­யங்­களைப்  படிக்கும் ஆர்வம்  ஏற்­பட்­டது

தமிழ் இலக்­கி­யத்தின் ஒரு பகுதி மன்­னர்­களின்  வர­லா­று­க­ளுடன்  பிணைந்தே உள்­ளது.

அதன் பின்­ன­ணியில் தீவிர அர­சி­யலும் இருக்­கி­றது!படிப்பு, வாசிப்பு, ரசிப்பு இம்­மூன்று பூக்­களும்  இல்­லா­விட்டால்  ஒரு மனி­தனின்  வாழ்க்கை முழுமை பெறாது என்று வள்­ளுவப் பெருந்­த­கையே சொல்­லி­யி­ருக்­கிறார்!
ஆழ்ந்த படிப்பு அறிவைக் கொடுக்கும்.

படிப்பும்   வாசிப்பும் இணைந்து நல்ல ரசனைத் திறனைக் கொடுக்­கும்­கி­றது என்­னோட கருத்து.

அதனால் தான்  இன்­னமும் நான் ஒரு மாணவன் போல் படிச்­சுக்­கிட்டே இருக்கேன் என்று  அடக்­கத்­துடன் சொல்­கிறார் தி.மு.க. எம்.எல்.ஏ.வும்  முன்னாள் பள்ளிக் கல்­வித்­துறை அமைச்­ச­ரு­மான  தங்கம் தென்­ன­ரசு. 
தங்கம்   தென்­ன­ர­சுவின் ரச­னைக்குச் சாட்சி சொல்­வ­து­போல அவ­ரது வீட்­டி­லுள்ள பிர­மாண்ட நூல­கத்தில் நிறைந்­தி­ருக்­கின்­றன பல்­லா­யி­ரக்­க­ணக்­கான நூல்கள். சம­ய­நூல்கள், சங்க இலக்­கியம், ஆழ்­வார்கள், நாயன்­மார்கள் வர­லாறு,  உரை­நடை இலக்­கி­யங்கள், திரா­விட இயக்கச் சிந்­த­னைகள், சமீ­பத்­திய இலக்­கி­யங்கள் என்று வித­வி­த­மாக அடுக்­கி­வைத்து வாசித்து வாழ்­கிறார் மனிதர். அர­சியல் தாண்டி  அவ­ரிடம் பேச ஆயிரம்  விஷ­யங்கள் இருக்­கின்­றன. 

உங்­க­ளது  மேடைப் பேச்சு,  சட்­ட­மன்றப் பேச்­சு­களில் திருப்­பாவை மேற்­கோள்கள் அதிகம் காணப்­ப­டு­கி­றதே?
நான் குடி­யி­ருக்கும் இடம் சென்­னை­கே­சவ பெருமாள் கோயி­லுக்கு அரு­கா­மையில் இருக்­கி­றது.

இதனால் சிறு­வ­யது முதலே திருப்­பாவைப் பாடல்கள் ஒலிக்கக் கேட்டு வளர்ந்தேன்.

என் வீட்­டுக்கு அரு­கா­மையில்  வசித்த ஸ்ரீவர மங்கை என்ற மாமி எனக்கு வளர்ப்புத் தாய் மாதிரி. அவர்தான் எனக்குத் திருப்­பாவை கற்­றுக்­கொ­டுத்­தவர்.

இளம் வயதில் தொடங்­கிய  இலக்­கிய ஆர்வம் தொடர்ந்து என்னை வளர்த்­துக்­கொள்ள வழி  செய்­தது. 

தி.மு.க.தலைவர் கலை­ஞரின்  பேச்­சுக்கள் அனை­வரும் ரசிக்கும் வகையில் இருக்கும்.  

அவ­ரைப்போல் நாமும் பேச  வேண்டும் என்றால் பல மடங்கு  பயிற்சி  தேவை.  எனக்குப் பயிற்சி   கொஞ்சம் குறைவு.

எனவே நான் கற்­றுக்­கொண்ட திருப்­பா­வையை  கையில் வைத்­துக்­கொண்டு சட்­ட­ச­பையில் 2006ஆம் ஆண்டு என் கன்னிப் பேச்சைத் தொடங்­கினேன்.

திருப்­பாவை பாசு­ரத்தைப் பாடி சபை­யோ­ருக்கு  வணக்கம்  சொன்னேன். அவ்­வப்­போது  அதி­லி­ருந்து  உதா­ர­ணங்கள்  எடுத்துப் பேசு­கிறேன்.!

உங்­களை மிகவும் கவர்ந்த சங்க கால நூல் எது?
நிச்­சயம் புற­நா­னூ­றுதான். புற­நா­னூற்றுப் பாடல்­களைக் கற்­றுக்­கொண்டால் போதும் வாழ்க்­கையின் எந்த ஒரு இடத்­திலும் தடம் புர­ளாமல் வாழும்  கொள்­கையைக் கைக்­கொள்ள முடியும்.

காரணம் புற­நா­னூற்றில் இல்­லாத  விஷ­யங்­களே  இல்லை.

திருக்­குறள் ஈர­டியில்  உலகை அளந்தால் புற­நா­னூறு நான்­க­டியில்  வாழ்க்­கை­யையே  அளந்­து­வி­டு­கி­றது. அதனால் தான் நான் எங்­கா­வது விருந்­தி­ன­ராகப் பேசச் சென்­றாலோ அல்­லது  மேடைப் பேச்­சுக்­களின் போதோ  அதி­க­ளவில் புற­நா­னூற்றுப் பாடல்­களில் இருந்து மேற்­கோள்­களை எடுத்துக் கொண்டு என்னைக் கொஞ்சம் நிரூ­பித்­துக்­கொள்­கிறேன்!

தமிழ்  உரை­நடை இலக்­கி­யங்கள் பற்­றிய உங்கள் கருத்து? 
உரை­நடை இலக்­கி­யங்கள் தமி­ழர்­க­ளுக்கு கிடைத்த அரிய பொக்­கி­ஷங்கள். அதிலும் கல்கி எழு­திய பொன்­னியின் செல்வன் பெரு உரை­நடைப் புத்­த­கத்தை தமிழ் உரை­நடை இலக்­கி­யத்தின் சிகரம் எனலாம்.

நான் மேல்­நிலைக் கல்­வியை முடித்த சம­யத்தில் பொன்­னியின் செல்வன் பெரு உரை­நடை இலக்­கி­யத்தை ரசித்துப் படித்தேன். அத்­துடன் அண்­ணா­மலைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இணைந்து மெக்­கா­னிக்கல் இன்­ஜி­னீ­யரிங் படிக்கத் தொடங்­கினேன்!.

பொன்­னியின் செல்வன் கதைக்­களம் ஏறக்­கு­றைய கடலூர், நாகை மாவட்­டங்­க­ளை­யொட்­டிய பகு­தி­களைச் சேர்ந்து இருக்கும்.

கல்­லூ­ரியில் எனக்கு விடு­முறை நாட்கள் கிடைக்கும் போது பொன்­னியின் செல்வன் கதை மாந்­தர்கள் வாழ்ந்த இடங்கள் எப்­படி இருக்கும் என்று பார்த்து இர­சிக்கக் கிளம்பி விடுவேன். 

சும்மா சொல்­லக்­கூ­டாது சார்......கல்­கியின் எழுத்து ரச­னைக்கு ஈடு இணை எதுவும் இல்லை.

அந்தப் புத்­த­கத்தில் உள்ள ஒவ்­வொரு வார்த்­தையும் ரச­னையின் வெளிப்­பாடு தான். நான் மட்­டு­மல்ல இலக்­கி­யத்தை விரும்பும் ரசிக்கும் வாசிக்கும் ஒவ்­வொ­ரு­வரின் வாழ்க்­கை­யிலும் பொன்­னியின் செல்வன் ஏதோ ஒரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும்!.

 திரா­விட சித்­தாந்தம் ஏற்­பட்ட பின்னர் உரை­நடை இலக்­கி­யங்­களில் மாற்றம் ஏற்­பட்­டதா?
நிச்­ச­ய­மாக, திரா­விட சித்­தாந்தம் தமிழ் மொழியின் உரை­நடை இலக்­கி­யத்தில் மிகப் பெரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

பாடல் வடிவில் இருந்த இலக்­கி­யத்தை கல்கி எப்­படி உரை­ந­டை­யாக மாற்­றி­னாரோ அதேபோல் அண்ணா, கலைஞர் மற்றும் அவர்­க­ளது சம­கா­லத்து எழுத்­தா­ளர்கள், தமிழ் அறி­ஞர்கள் தமிழ் இலக்­கி­யத்­துக்கு மிகப் பெரிய தொண்­டுகள் செய்­துள்­ளனர். 

என் வீட்டில் உள்ள நூல­கத்தில் திரா­விட சித்­தாந்தம் மற்றும் அதன் இலக்­கியத் தொகு­திகள் குறித்து ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான புத்­த­கங்கள் வைத்­துள்ளேன்.

மேடைப் பேச்சில் பிசிறு இல்­லாமல் ஆதா­ரங்­க­ளுடன் பேச வேண்டும் எனில் இந்தப் புத்­த­கங்­களை நான் படித்துக் கொண்டே இருக்க வேண்டும்!.

இயந்­தி­ர­வியல் பட்­ட­தா­ரி­யான நீங்கள் வர­லாற்றின் பக்கம் அதி­க­மாக ஆர்வம் கொண்­டி­ருப்­பதேன்?
அண்­ணா­மலைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் படித்த போது நான் தங்­கி­யி­ருந்த விடு­திக்கு அரு­கி­லேயே மிகப் பிர­மாண்ட நூலகம் இருந்­தது.

அந்த நூல­கத்தின் எந்த அடுக்கில் எந்தப் புத்­தகம் உள்­ளது என்­பதை மனப்­பா­ட­மாகக் கூறும் அள­வுக்கு அங்­கேயே நாட்­க­ணக்கில் செல­வ­ழித்­துள்ளேன். 

பொன்­னியின் செல்வன் ஏற்­ப­டுத்­திய தாக்­கத்தால் பல வர­லாற்று இலக்­கி­யங்­களைப் படிக்கும் ஆர்வம் ஏற்­பட்­டது.

தமிழ் இலக்­கி­யத்தின் ஒரு பகுதி மன்­னர்­களின் வர­லா­று­க­ளுடன் பிணைந்தே உள்­ளது. அதன் பின்­ன­ணியில் தீவிர அர­சி­யலும் இருக்கும்.

ஒரு அர­சியல் வாதி­யாக நான் இலக்­கி­யங்­க­ளி­லி­ருந்து நிறையக் கற்­றுக்­கொள்­கிறேன், பிர­மிக்­கிறேன்!.

நீங்கள் வெளி­யிட்ட மாம­துரை புத்­தகம் பற்றி?
தமிழ் இலக்­கியம், வர­லாறு, மதம் என்று அனைத்­து­டனும் தொடர்­பு­கொண்ட ஒரு பெருமை மிக்க ஊர் உண்­டென்றால் அது நிச்­சயம் மது­ரை­யா­கத்தான் இருக்க முடியும்.

சிலப்­ப­தி­கா­ரத்தின் நிகழ்­விடம் மதுரை. இது காவியம். சிலப்­ப­தி­கா­ரத்தில் கோவலன் பழி சுமத்­தப்­பட்டு மாண்­டது மதுரை மண்ணில்.

அது அர­சாட்சி. மதுரை மன்னன் மீது கோபம் கொண்ட கண்­ணகி மது­ரையைத் தீக்­கி­ரை­யாக்கித் தெய்­வ­மா­னது ஏறக்­கு­றைய ஒரு மதம் தொடர்­பான நிகழ்வு. தெய்­வத்­தன்மை பற்றி இந்து மதம் சுட்­டிக்­காட்­டு­வதை நாம் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

அதனால் தான் மது­ரைக்கு வர­லாற்றில் அப்­ப­டி­யொரு பெருமை கிடைத்­துள்­ளது.

மது­ரையின் பெரு­மையை இன்­றைய இளைய தலை­மு­றை­யிடம் கொண்டு போய் சேர்க்கும் வகையில் மாம­துரை நிகழ்ச்­சியை நடத்தி ஒரு புத்­த­க­மாக வெளி­யிட்டோம்.

மது­ரையை ஆட்சி செய்த பாண்­டிய மன்­னர்கள், மீனாட்சி கோயில், முஸ்லிம் படை­யெ­டுப்பு, நாயக்­கர்­களின் ஆட்சி என்று மிக விரி­வான ஒரு புத்­த­கத்தை வெளி­யிட்டோம்.

இது வர­லாற்றுக் காத­லர்­க­ளுக்கு அரு­மை­யான புத்­த­க­மாக அமைந்­தது பெரு­மைக்­கு­ரிய விஷயம்!

தமி­ழ­கத்தின் சிற்பக் கலை பற்­றிய பல அரிய தக­வல்­களை அவ்­வப்­போது அறிந்து வெளி­யி­டு­கி­றீர்­களே?
தமி­ழ­கத்தில் உள்ள கோயில்கள் சிற்பக்கலை­யின் சங்­கமம் எனலாம். ஒவ்­வொரு கோயி­லிலும் தனித்­து­வ­மான விசேட சிற்ப வேலைப்­பா­டுகள் இருக்கும்.

ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள சேஷ­ராயர் மண்­ட­பத்தின் தூண்கள் மிக நுண்­ணிய கலை வேலைப்­பா­டு­களைக் கொண்­டவை. இது விஜ­ய­ந­கர கலைப்­பா­ணியைக் கொண்­டது.

இதே கோயிலின் மற்­றொரு பகு­தியில் வேணு­கோ­பாலன் சந்­நிதி சுவற்றில் ஹொய்­சாள கலைப்­பா­ணியின் தாக்­கத்தைப் பார்க்க முடியும். 

மதுரை மீனாட்­சி­யம்மன் கோயில் சிற்­பக்­க­லையின் உச்­ச­கட்ட வேலைப்­பா­டுகள், சிற்பம், தொல்­லியல், வர­லாறு, இலக்­கியம் என்று எதை எடுத்­தாலும் அது ஒரு சங்­கிலித் தொடர்போல் நீண்­டு­கொண்டே இருக்கும்.

மதுரை சிவ­கங்கை மாவட்ட எல்­லையில் உள்ள கீழ­டியில் மத்­திய தொல்­லி­யல்­து­றையின் சமீ­பத்­திய ஆய்­வுகள் நம் தமிழர் வர­லாற்றின் மறைக்­கப்­பட்ட, மறக்­கப்­பட்ட மற்றும் கண்­டு­பி­டிக்க முடி­யாத பல ரக­சி­யங்­களை வெளி உல­கத்­துக்கு கொண்டு வந்­துள்­ளது.

அகழ்வு ஆராய்ச்­சியின் போது கிடைக்கும் அரிய சிற்­பங்­களை பாது­காப்­பது நம் ஒவ்­வொ­ரு­வரினதும் கடமை. அது நமது வர­லாற்றின் அரிச்­சு­வ­டிகள். கலை என்ற தமிழர் மர­ப­ணுவின் இடையில் விடு­பட்ட சங்­கிலித் தொடர்.

அதனால் இலக்­கி­யத்தின் பக்கம் செல்லும் போது இவற்­றையும் தொட்டுச் செல்ல வேண்­டி­யுள்­ளது. 

இலக்­கியம் தான் முழு­நேர பொழுது போக்கா?
நூல்கள் என் இலக்­கிய அறிவை வளர்த்துக் கொள்­வ­தற்­கா­னவை. ஆனால் இயற்கை மீது ஆர்வம் அதிகம்.

காட்டுயிர் தொகுதிகள் மீது அலாதி ஆர்வம். அது குறித்த ஆங்கில மற்றும் தமிழ் புத்தகங்கள் எங்கு கிடைத்தாலும் தேடித்தேடி சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.

மலைச் சூழல் எனக்குப் பிடிக்கும். மலையேற்றம், காட்டுயிர் ஆய்வு என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னை நான் கொஞ்சம் புத்தாக்கம் செய்து கொள்வேன். 

வாசிப்பு மட்டும் போதுமா எப் போது எழுதப்போகிறீர்கள்?
இப்போதைக்கு எந்தத் திட்டமும் இல்லை. ஆனால் நான் சேகரிக்க வேண்டிய நூல்கள், தகவல்கள், அறி வுக்களஞ்சியம் இன்னும் அதிகமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இவை அனைத்தும் ஓரளவு தயா ரான பின்னர் நிச்சயம் காட்டுப் பல்லு யிர்கள், தமிழ் இலக்கிய மதிப்பீடு குறித்து புத்தகங்கள் எழுதும் திட்டம் உள்ளது என்றார் தங்கம் தென்னரசு.